எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 63 சதவீத வாக்குகள் பதிவு
புதிய இணைப்பு
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 10 மணிக்கு பின்னர் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வாக்கு எண்ணிக்கையின் பின்னர் முடிவுகள் காலி தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குகளின் எண்ணிக்கை
இதனையடுத்து, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படும் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (26) காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றுள்ளன.
மேலும், 28 உறுப்பினர்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இந்த முறை 8 கட்சிகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |