ஹட்டன் வயோதிப தம்பதியினரின் கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

By Vinoja May 24, 2026 06:13 PM GMT

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீற்றர் போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் பின்னர் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹட்டன் வயோதிப தம்பதியினரின் கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Hatton Dikoya Copple Killed Update

47 வயதுடைய சந்தேகநபர் ஹாலிஎல, தெமோதரை பகுதியைச் சேர்ந்தஒரு குழந்தையின் தந்தையான 'செல்லையா மனோஜ்' என்பவராவார்

குறித்த சந்தேகநபர் கைது கடந்த (21) ஆம் திகதி இந்தக் கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்று பொகவந்தலாவை பெட்ரோஸோ தோட்டத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில், (23) ஆம் திகதி ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த பெண்ணின் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர், தனது மனைவியின் சகோதரரின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் வயோதிப தம்பதியினரின் கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Hatton Dikoya Copple Killed Update

சந்தேக நபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியினரின் இறுதிச்சடங்குகள் இன்று (24) மக்களின் கண்ணீரஞ்சலியுடன் தரவளை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.