வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Jaso
பாணந்துறை வடக்கு, கல்கனுவ வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 26 வயதுடைய ஒரு மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயிலும் சட்டக் கல்லூரி மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி உயிரிழந்த வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதுடன் தனது படிப்பைத் தொடர்ந்துள்ளார்.
அத்தோடு சட்டத்தரணி ஒருவரின் சட்டப் பணிகளுக்கும் உதவி புரிந்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் குறித்து பாணந்துறை வடக்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.