பிரித்தானியாவில் இஸ்லாமிய கூட்டத்தை இலக்கு வைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்: 12 பேர் அதிரடி கைது
United Kingdom
World
By Sajithra
பிரித்தானியாவில் நடைபெற்ற இஸ்லாமிய மதக் கூட்டமொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர வலதுசாரி பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக 12 பேரை அந்நாட்டு பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போதே இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 82 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 11 பேர் ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகவும் பிரித்தானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.