ஈரான் மீது அமெரிக்கா நடத்திய சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்கள்

United States of America Iran Middle East
By Sajithra Jul 08, 2026 01:01 AM GMT

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரான் மீது தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு என்று அமெரிக்கா கூறுகிறது, ஆனால் ஈரான் இன்னும் அந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் தாக்குதல்களில் மூன்று கப்பல்கள் சேதமடைந்தன, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கிடையில், ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை விலக்கையும் அமெரிக்கா இரத்து செய்துள்ளது.

கட்டாரும் சவூதி அரேபியாவும் கப்பல் தாக்குதல்களைக் கண்டித்ததோடு, தங்கள் நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.