இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான சஜின் வாஸ் குணவர்தன
CID - Sri Lanka Police
Colombo
Sri Lanka Politician
Sri Lanka Government
By Aanadhi
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகியுள்ளார்.
இலஞ்ச ஆணைக்குழுவால் நடத்தப்படும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் நேற்றைய தினம்(27.07.2026) அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இலஞ்ச ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு இணங்க சஜின் வாஸ் குணவர்தன நேரில் முன்னிலையாகியிருந்தார்.

கொழும்பு காலிமுகத்திடல் அருகே ஷங்ரிலா ஹோட்டல் அமைந்துள்ள நிலம் தொடர்பாக நடத்தப்படும் ஒரு விசாரணையின் தொடர்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகின்றது.