வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அவசர அறிவிப்பு...!
வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்குப் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த எச்சரிக்கை இன்று (03-08-2026) விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (04-08-2026) காலை 11:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி (Southwest Monsoon) தீவிரமடைந்துள்ளதன் காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
