அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!

Sri Lanka United States of America World
By Shalini Balachandran Jul 22, 2026 08:44 PM GMT

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் குற்றப் பின்னணிகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கினால் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சிறிய குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா மறுப்புக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தூதரக அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களின் குற்றப் பின்னணி விபரங்கள் இருப்பதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழுமையான உண்மையை மட்டுமே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்களை அளித்தால் எதிர்காலப் பயணங்கள் நிரந்தரமாகத் தடை செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.