இலங்கையில் திடீரென சொத்துக்களை குவித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Gold
By Dhayani Jul 10, 2026 02:57 AM GMT

இலங்கையில் சட்டப்பூர்வமான வருமான ஆதாரமின்றி திடீரென சொத்துக்களை குவித்து ஆடம்பரமான வாழ்க்கை வாழும் நபர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு சொத்துக்களை சேர்ப்பவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினரும், பொலிஸாரும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் 

மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத வழிகள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத உடைமைகள் குறித்த விசாரணைகள் நாடு முழுவதும் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

இலங்கையில் திடீரென சொத்துக்களை குவித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எச்சரிக்கை | Police Inform Suddenly Acquired Property

சமூகத்தின் நலனுக்காக சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸ் பிரிவு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.