ஹோர்முஸில் இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஈரான்.. பலியான இந்தியர்

United States of America United Arab Emirates Iran Middle East
By Sajithra Jul 14, 2026 01:02 AM GMT

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு எண்ணெய் கப்பல்களை, ஈரான் ஏவுகணைகளால் தாக்கியுள்ளது. 

இந்த தாக்குதலில் இந்தியக் கப்பல் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயங்கர தாக்குதல் 

காயமடைந்த எட்டு பேரில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவர்களில் ஆறு பேர் இந்திய நாட்டினர் மற்றும் இரண்டு பேர் உக்ரேனிய நாட்டினர் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஓமான் கடல் எல்லையில் உள்ள ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதையில் பயணித்தபோது, ​​மொம்பாசா மற்றும் அல் பஹியா என்ற இரண்டு கப்பல்களும் தாக்கப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பணியாளர் மொம்பாசா கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.