2 நாட்களில் பல கோடி வசூல் சாதனை
கடந்த ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.
சமீபத்திய வீதி அபிவிருத்தி அதிகாரசபை புள்ளிவிவரங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக வீதி அமைப்பிலும் பயணித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 325,316 ஆகும்.
வாகனங்களின் எண்ணிக்கை
ஆகஸ்ட் 26 ஆம் திகதி 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் ஈட்டப்பட்ட வருமானம் 60,409,995 ரூபாயாகும்.

ஆகஸ்ட் 27 ஆம் திகதி அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 161,553 ஆகும்.
அன்றைய தினம் 64,164,930 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.