முள்ளி வாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் ஏந்துவோம் - முதல்வர் விஜய் உருக்கம்

Vijay Jaffna Tamil nadu Sri Lanka TVK
By Vinoja May 18, 2026 03:56 PM GMT

முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!" என தமிழக முதல்வர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி ஈழப்போரின் இறுதிநாளில் முள்ளிவாய்க்காலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தமிழினப்படுகொலையை ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி உலகெங்கும் வாழும் தமிழர்கள், நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் முள்ளிவாய்க்காலை நினைவு கூர்ந்து உருக்கமான பதிவொன்ளை வெளியிட்டுள்ளார்.