எல்ல சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களுக்கு நேர்ந்த கதி..! விசாரணையில் சிக்கிய இருவர்
எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் காதலர்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது
முதற்கட்ட விசாரணைகளின்படி, காதலர்களை அச்சுறுத்திய சந்தேக நபர்களில் ஒருவர், குறித்த பெண்ணை தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபர் காதலர்களிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
மேலும், பல இளம் ஜோடிகளிடமிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு சொத்துக்களை தொடர்ந்து அபகரித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.