இலங்கையிலுள்ள சுற்றுலாத்தலங்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
இலங்கையிலுள்ள சுற்றுலாத்தலங்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்,பாதுகாப்பினை பலப்படுத்த பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர், இராணுவ உத்தியோகத்தர்கள், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பலத்த பாதுகாப்பு
நாட்டில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அண்மையில் இஸ்ரேலிய பிரஜைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என அறுகம்பேவில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பல்வேறு சர்வதேச நாடுகளும் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.
இதேவேளை, இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |