திருகோணமலையில் பதிவான நிலநடுக்கம்!

Trincomalee Sri Lanka Earthquake
By Fathima Jan 31, 2026 11:28 AM GMT

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று(31.01.2026) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் இதனை உறுதிப்படுத்தினார். 

நிலநடுக்கம் 

இன்று மாலை 3.49 மணியளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் பதிவான நிலநடுக்கம்! | Earthquake In Trincomalee Today

அத்துடன்,  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.