வீதியில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்ட இரு முஸ்லிம் பெண்கள்! விசாரணைகள் ஆரம்பம்
By Fathima
நெதர்லாந்தில் இரண்டு முஸ்லிம் பெண்கள் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம், அந்த நாட்டில் பெரும் எதிர்ப்பலைகளையும் சமூக கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
காரணம்
இந்த சம்பவத்தில் காவல் அதிகாரி ஒருவர் இரண்டு முஸ்லிம் பெண்களை பொதுவெளியில் வைத்து தாக்கியுள்ளார்.

இது தொடர்பான காணொளிகள் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றன.
மேலும், குறித்த இரண்டு முஸ்லிம் பெண்கள் எந்த காரணத்திற்காக தாக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.