லண்டனில் பரவும் புதிய நோய் தொற்று: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

London Virus Disease
By Amal Feb 16, 2026 08:42 AM GMT
Amal

Amal

வடக்கு லண்டனில் உள்ள பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் (Measles) அதிவேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

லண்டனின் என்பீல்ட் (Enfield) பகுதியில் உள்ள 7 பாடசாலைகளில் குறைந்தது 34 சிறுவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் இங்கிலாந்து முழுவதும் பதிவான 96 வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு என்பீல்ட் பகுதியிலேயே பதிவாகியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு சிறுவர் வீதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தாக்கத்திற்கானமுக்கிய காரணம்

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. என்பீல்ட் பகுதியில் தட்டம்மைத் தடுப்பூசி (MMR) போட்டுக்கொண்டவர்களின் வீதம் 64.3% ஆகக் குறைந்துள்ளது.

லண்டனில் பரவும் புதிய நோய் தொற்று: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | New Disease Spreading In London

இது பரிந்துரைக்கப்பட்ட 95% அளவை விட மிகக் குறைவாகும்.

இதன் காரணமாகவே பிரித்தானியா தனது 'தட்டம்மை ஒழிப்பு' (Measles elimination) அந்தஸ்தை இழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.