துருக்கிக்கு விஜயமான ஈரானின் வெளிவிவகார அமைச்சர்...!
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் துருக்கிக்கு பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளார்.
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஒரு நாள் பயணமாக இன்று காலை துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றதாக ஈரானின் மேர் (Mehr) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை
இதன்படி, துருக்கி வெளிவிவகார அமைச்சகத்தின் பிராந்திய இயக்குநர் உள்ளிட்ட துருக்கி அதிகாரிகள் அராக்சியை அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர்.

இந்த பயணத்தின் போது, இருதரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தி அராக்சி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்தோகானை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.