கிழக்கில் ஆரம்பமான ஓவியத்திருவிழா
கிழக்கின் ஓவியத் திருவிழா எனும் தலைப்பில் ஓவிய கண்காட்சியொன்று கிழக்கு மகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம் இணைந்து நடாத்தியுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (25) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 10 நாட்களை கொண்ட கண்காட்சியாக நடைபெறவுள்ளது.
அதிதிகளை சிறப்பித்தல்
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பாரதி கென்னடி மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளனர்.
இவ்ஓவிய கண்காட்சியில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் உள்ளிட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், கலாசார உத்தியோகத்தர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |