புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு...
2026 ஆம் ஆண்டில், முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்று(29.01.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கான தேசிய நிகழ்வு, அதுருகிரிய குணசேகர கல்லூரியில், கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த முறை முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
'எதிர்காலத்திற்கான முதல் படி' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த தேசிய விழாவில் முதலாம் ஆண்டுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரிய கூறியுள்ளார்.