திருமதி உலக அழகிப் போட்டியில் சபீனா யூசுப்பிற்கு கிடைத்த இடம்!

Sri Lanka Mrs World 2025
By Fathima Jan 30, 2026 07:06 AM GMT
Fathima

Fathima

41ஆவது உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

குறித்த அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார்.

மூன்றாம் இடம்

போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.  

திருமதி உலக அழகிப் போட்டியில் சபீனா யூசுப்பிற்கு கிடைத்த இடம்! | Sri Lanka S Sabina Yousaf Mrs World

அமெரிக்காவில் நடைபெற்ற இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30.01.2026) காலை நிறைவடைந்தது.

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

இப்போட்டியில் உலகின் 60இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.