முஸ்லிம் தலைவர்களின் வருகையை முன்னிட்டு அம்பாறையில் கடும் பாதுகாப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் அதாவுல்லாஹ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் வருகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நேற்று (25) மாலை முதல் இன்று (26) வரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சவளக்கடை, நாவிதன்வெளி, சொறிக்கல்முனை ,வீரமுனை, சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டப்பளம், பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ,தம்பிலுவில், தம்பட்டை ,திருக்கோவில், பொத்துவில், உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடு
இதேவேளை அம்பாறை மாவட்டம் பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
இதன் காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் முக்கிய சந்திகள் இதர வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |