நாட்டையே உலுக்கிய இரட்டைக்கொலை சம்பவம் - தலைமறைவான சந்தேகநபர் அதிரடி கைது!
டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில், இன்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சந்தேகநபர், கடந்த 21ஆம் திகதி குறித்த தம்பதியினரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியினார்.
அதனை தொடர்ந்து பொலிஸார் மக்களின் உதவியை நாடினர். மக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.
நீண்டகாலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு, அண்மையில் கடையை மூடிவிட்டு அங்கேயே வசித்து வந்த 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோரே இவ்வாறு குறித்த நபரால் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
கொலைகாரன் தம்பதியினரிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.