மகிந்தவை தொடர்ந்து கோட்டாபய : பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை

COVID-19 Gotabaya Rajapaksa Bribery Commission Sri Lanka
By Vinoja May 17, 2026 03:23 PM GMT

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலகட்டத்தில் கோவிட் 19 தொற்றின் போது ரெபிட் அண்டிஜன் பரிசோதனை கருவிகள் இறக்குமதியில் நடந்த பாரிய மோசடி குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களின் பெயர்கள் கூட குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அண்மையில் இது குறித்து நாடாளுமன்றத்திலும்  பேசப்பட்டது.

மகிந்தவை தொடர்ந்து கோட்டாபய : பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை | Rapid Antigen Test Gotabaya Rajapaksa Scandal

பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றின் ஊடாக ரெபிட் அண்டிஜன் (rapid antigen test) பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்ததில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பிலே விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

3.1 பில்லியன் ரூபாய் பெறுமதியான அண்டிஜன் கருவிகளை இறக்குமதி செய்ததில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.