எதிர்பாராத குளவித் தாக்குதல்! 5 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Sri Lankan Peoples
By Thiva May 14, 2026 10:48 AM GMT

பொகவந்தலாவை - கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஐந்து பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று(14.05.2026) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

தேயிலை தோட்டத்தில், தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த போது மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்பாராத குளவித் தாக்குதல்! 5 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி | 5 Women Admitted To Hospital

இதன்போது, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஊழியர்கள் அச்சமடைய தேவையில்லை என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

எதிர்பாராத குளவித் தாக்குதல்! 5 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி | 5 Women Admitted To Hospital

எதிர்பாராத குளவித் தாக்குதல்! 5 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி | 5 Women Admitted To Hospital