கிண்ணியாவில் 8 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Trincomalee Sri Lankan Peoples Public Health Inspector
By Rakshana MA Mar 22, 2025 10:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

திகோணமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 8 BBQ உணவகங்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜித் தலைமையில் குறித்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதில் திருகோணமலையின் பல பகுதியில் இருந்து வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுரவின் முதலாவது பட்ஜெட்டுக்கு எதிர்த்தரப்பில் இருந்து ஆதரவு கரம்

அநுரவின் முதலாவது பட்ஜெட்டுக்கு எதிர்த்தரப்பில் இருந்து ஆதரவு கரம்

வழக்கு தாக்கல்

மேலும், இதன்போது நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் மற்றும் சுமார் 60Kg கோழி இறக்கைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு முன்னதாக கிடைக்கப்பெற்ற 20 குற்றச்சாட்டியின் கீழ், 8 BBQ கடைகளுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒரு கடை மூடப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் 8 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் | Case Filed Against 8 Bbq Restaurants In Kinniya

மேலும், எதிர்வரும் காலங்களில் ஏனைய வர்த்தக நிலையங்களும் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்

அம்பாறையில் மாட்டிறைச்சியின் விலையை குறைக்க தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி சமீம்

அம்பாறையில் மாட்டிறைச்சியின் விலையை குறைக்க தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி சமீம்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW