ஹஜ்ஜுப் பெருநாள் பயணம் சோகத்தில் முடிந்தது - தாகத்தால் 49 பேர் உயிரிழப்பு!
ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டு மாலியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 49 பேர், வடக்கு நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதடைந்து நின்றதன் காரணமாக, தாகத்தால் உயிரிழந்துள்ளனர்.
பயணத்தின் போது அவர்களிடம் இருந்த தண்ணீர் முழுமையாக தீர்ந்துவிட்ட நிலையில்,கடுமையான வெப்பநிலையும், அத்தியாவசிய உதவிகள் கிடைக்காத தொலைதூர பாலைவனப் பகுதியிலும் அவர்கள் சிக்கிக் கொண்டதாக அகடேஸ் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் பாலைவனத்தைக் கடந்து அசாமாகா பகுதிக்கு சென்று அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தண்ணீர் இல்லாததாலும், பழுதடைந்த வாகனத்தைச் சரிசெய்ய முடியாததாலும் பெரும்பாலானோர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.