யாழில் 10 அடி பதாகைக்கு செருப்பு மாலை - கிழித்து காரில் எடுத்து சென்ற அர்ச்சுனா எம்பி

Jaffna Parliament of Sri Lanka Ramanathan Archchuna
By Vinoja Jun 19, 2026 05:36 PM GMT

யாழ்ப்பாண நகரை அண்மித்த பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் சுமார் 10 அடி உயர பதாகை ஒன்று வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தைப் பிரயோகங்கள், சபை நாகரிகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் ஈடுபட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

யாழில் 10 அடி பதாகைக்கு செருப்பு மாலை - கிழித்து காரில் எடுத்து சென்ற அர்ச்சுனா எம்பி | Sandals Garland Was Placed On The Banner Of Arjuna

இந்நிலையில், நேற்று (18) நடைபெற்ற தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அவர் மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த பின்னணியிலேயே, அவரது 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன், பதாகையை கிழித்தெடுத்து தனது காரில் எடுத்து சென்றுள்ளார்.