ஹொரணை வங்கி மூன்றரை கோடி கொள்ளை: உதவி முகாமையாளரின் இரகசிய வாழ்க்கை அம்பலம்!

Sri Lanka Police People's Bank Crime
By Vinoja Jun 06, 2026 03:27 PM GMT

ஹொரணை நகரிலுள்ள ஒரு அரச வங்கியில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டுவரும் விசாரணைகளில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி முகாமையாளர், பல பெண்களுடன் தொடர்பு பேணி வந்ததாகவும், அதன் காரணமாக அவர் பெருமளவு கடன்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

ஹொரணை வங்கி மூன்றரை கோடி கொள்ளை: உதவி முகாமையாளரின் இரகசிய வாழ்க்கை அம்பலம்! | Horanai Bank Robbery Reasons Released

குறித்த கொள்ளை சம்பவத்தில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படுகிறது. கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தில் ஒரு பகுதி வங்கிக்குள்ளேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும், கொள்ளை நடைபெற்ற சமயத்தில் வங்கியின் CCTV கண்காணிப்பு அமைப்பை குறித்த உதவி முகாமையாளர் செயலிழக்கச் செய்திருந்தார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.