ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்
பலஸ்தீன(Palestine) ஆதரவு வெளிநாட்டு மாணவர்களை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்த கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர், நாடுகடத்தலுக்காக குடியேற்ற அதிகாரிகளிடம் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் காம்பியாவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற மொமோடூ தால், அடையாளம் தெரியாத சட்ட நடைமுறை அதிகாரிகள் அவரைத் தடுத்து வைக்க முயன்றபோது, தான் நாடுகடத்தப்படுவதற்கு இலக்காக இருப்பதாக கூறியதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு
வழக்குத் தொடரப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில், சமூக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், தாலின் வழக்கறிஞர் எரிக் லீ, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியுள்ளார்.
Statement on the unfolding situation with our client Momodou Taal. pic.twitter.com/nKmsoPOUSu
— Maria Kari (@mariakari1414) March 21, 2025
அத்தோடு, "நாங்கள் கோபமாக இருக்கிறோம், ஒவ்வொரு அமெரிக்கரும் அப்படித்தான் இருக்க வேண்டும். சர்வாதிகாரத்தின் அவசர அச்சுறுத்தலுக்கு எதிராக பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை தீவிரமாக பயன்படுத்துவதன் மூலம் பாதுகாக்க, மக்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |