கோட்டபயவின் உத்தரவுக்கு அமைய பயங்கரவாதி சஹ்ரான் கும்பலுக்கு சம்பளம் வழங்கிய சலே

Gotabaya Rajapaksa Sarath Fonseka Easter Attack Sri Lanka
By Vethu Jun 10, 2026 04:22 AM GMT

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சுரேஷ் சலே சம்பளம் வழங்கியதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி அறிவுறுத்தல் மற்றும் அனுமதியுடன் இவை அனைத்தையும் சலே செய்ததாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சவின் அடிமை

சுரேஷ் சலே என்பவர் ஒரு இராணுவ அதிகாரி என்பதை விட, கோட்டாபய ராஜபக்சவின் அடிமை போல செயற்பட்ட ஒரு நபர் என பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

கோட்டபயவின் உத்தரவுக்கு அமைய பயங்கரவாதி சஹ்ரான் கும்பலுக்கு சம்பளம் வழங்கிய சலே | Sarath Fonseka Accused Suresh Salley

கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியின்றி சலே கழிவறைக்குக் கூடச் செல்வதில்லை. அவர் ராஜபக்சர்களின் ஒரு ஆலோசகர் போல செயற்பட்டார்.

தான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் சலேயை புலனாய்வுப் பிரிவுப் பதவிகளிலிருந்து நீக்கியிருந்த போதிலும், பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைத்துக் கொண்டார் என சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.