அம்பாறையில் மாட்டிறைச்சியின் விலையை குறைக்க தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி சமீம்

Ampara Sri Lanka Sri Lankan Peoples Local government Election
By Rakshana MA Mar 22, 2025 05:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

மாட்டிறைச்சியின் விலையை 1,700 ரூபாயாக குறைக்க இந்த தேர்தலில் சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிட்ட தீர்மானித்துள்ளதுடன், இறக்காமம் பிரதேச சபையில் தனித்து ஆட்சி அமைக்கவே முயற்சிக்கிறோம் என கால்பந்து சின்ன சுயேச்சைக் குழுத் தலைவர் சட்டத்தரணி கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலியர்களால் அழிக்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை- கண்டிக்கும் ஐக்கிய நாடுகள்

இஸ்ரேலியர்களால் அழிக்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை- கண்டிக்கும் ஐக்கிய நாடுகள்

இறக்காமம் பிரதேச சபை

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அம்பாறை இறக்காமம் பிரதேச சபையானது 3 ஆவது தேர்தலை முகம் கொடுக்கின்றதுகட்சிகளில் அவநம்பிக்கை காரணமாக நாம் சுயேட்சையில் களமிறங்கியுள்ளோம்.

அம்பாறையில் மாட்டிறைச்சியின் விலையை குறைக்க தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி சமீம் | Lawyer Sameem Contesting Election Cut Beef Price

அதே வேளை இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதும் அத்துடன் இறக்காமம் பிரதேசத்தில் மாட்டிறைச்சியின் விலையை 1,700 ரூபாய்க்கு வழங்குவதும் எமது சுயேட்சைக் குழுவின் நோக்கமாகும்.

இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவு இன்மையால் அம்பாறை பொது வைத்தியசாலையில் பதிவுகள் சிங்கள மொழியில் இடம்பெறுவதனால் அகமது என்ற பெயர் முகம்மது எனவும் அன்சார் என்ற பெயர் கின்சார் என்றும் கபீப் என்ற பெயர் குபாப் என்றும் மாறி வருவதனால் பாடசாலைக்கு மாணவர்களை சேர்ப்பதில் சத்தியகடதாசி தேடுகின்ற அவல நிலைக்கு இறக்காமம் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான உரிமை சார்ந்த பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகவே எந்தவித கட்சித்தலைவர்களதும் அழுத்தமின்றி இம்முறை சுயேட்சைக்குழுவில் சுயமாக இயங்க தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

உச்சம் தொடும் தங்க விலை! வாங்கவுள்ளேருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

உச்சம் தொடும் தங்க விலை! வாங்கவுள்ளேருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW