மத்திய கிழக்கிற்கான முக்கிய விமானச் சேவைகளை இரத்து செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Dubai United Kingdom Iran Middle East
By Sajithra Jun 06, 2026 01:33 AM GMT

மத்திய கிழக்கு நாடுகளுள் பல இடங்களுக்கான விமானச் சேவைகள், ஒக்டோபர் மாதம் வரை மீண்டும் தொடங்கப்படாது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

முன்னர் திட்டமிடப்பட்டதை விட சேவையை இரண்டு மாதங்களுக்கு மீண்டும் தொடங்குவதை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

ஈரான் போர் வெடித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கின் பல முக்கிய இடங்களுக்கான விமான சேவைகளைக் குறைப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

தொடர் நீட்டிப்பு 

அதன்படி, துபாய், தோஹா மற்றும் தெல் அவிவ் ஆகிய இடங்களுக்கான சேவைகள் ஆரம்பத்தில் ஜூலை மாதத் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கிற்கான முக்கிய விமானச் சேவைகளை இரத்து செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் | Britain Cancels Major Flights To The Middle East

இந்த நிலையில், மத்திய கிழக்கில் தொடரும் கொந்தளிப்பான சூழல் காரணமாக, தனது விமான சேவைகளில் கூடுதல் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது தெரிவித்துள்ளது.

துபாய், தோஹா மற்றும் தெல் அவிவ் ஆகிய இடங்களுக்கான சேவைகள் ஆரம்பத்தில் ஜூலை மாதத் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மத்திய கிழக்கில் தொடரும் போர் சூழல் காரணமாக, தனது விமான சேவைகளில் கூடுதல் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது தெரிவித்துள்ளது.