சர்வதேச ஊடகவியலாளருக்கு பகிரங்க சவால் விட்ட ஜனநாயக கட்சியின் தலைவர்
சர்வதேச ஊடவியலாளர் மெஹ்தி ஹசனுக்கு ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் அன்வர் முஸ்தபா பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை நேர்காணல் செய்தது போல காஸா, மியான்மர், காஷ்மீர் பிரச்சினைகள் குறித்து டொனால்ட்ட ட்ரம், விளாடிமிர் புடின், நரேந்திர மோடி, பெஞ்சமின் நெத்தன்யாகு போன்றவர்களிடம் கேள்வி கேட்க அல் ஜெசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசனுக்கு முடியுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
அல் ஜெசீராவின் சமீபத்திய நேர்காணல், பத்திரிகையாளர் மெஹ்தி ஹசனுக்கு தோல்வியாகத் தெரிகிறது.
ஊடக தர்மத்தை மீறிய சந்தர்ப்பங்கள்
இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். பத்திரிகையாளர் சிஐடி அதிகாரியைப் போல மூலையில் வைத்து கேள்வி கேட்கும் நோக்கத்தில் இருந்தார் என்றே நான் கருதுகிறேன்.
மட்டுமன்றி கேள்வியை கேட்டுவிட்டு பதிலளிக்க நேரம் கொடுக்காமல் அவரே கதைத்து கொண்டிருந்தார். பதிலளிக்கும் போது இடைஞ்சல் செய்து கொண்டே இருந்தார்.
ஊடகவியலாளரை போன்று அல்லாது சர்வதேச நிறுவனங்களின் முகவரைப் போன்று செயற்பட்ட மெஹ்தி ஹசன் தனிநபரின் விருப்பு, வெறுப்புகளை நோக்கியே தனது பார்வையை செலுத்தினரே தவிர ஊடக தர்மத்தை மீறிய சந்தர்ப்பங்கள் நிறையவே அவரின் காணொளியில் வெளிப்பட்டது.
ஒரு நாட்டின் தலைவரை செவ்வி காண்பது போலல்லாது சர்வதேச நிறுவனங்களின் அஜந்தாக்களை நிறைவேற்றும் ஒருவர் போலவே அவரது தொனி அமைந்திருந்தததுடன் ஒரு அரச தலைவர் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சக மூத்த அரசியல் தலைவரொருவரின் மரண வீட்டுக்கு, பிறந்தநாள் நிகழ்வுகளுக்கு செல்வதை கூட கேள்விக்கு உட்படுத்தினார்.
1990ஆண்டு யுத்தம்
கடந்த காலங்களில் காஸா விடயங்களில் ரொனால்ட் ட்ரம்ப் போன்றவர்களிடம் பதுங்கிய இவர்கள் இலங்கை விடயத்தில் சூடாக காணப்பட்டார்கள்.
இப்படியான விடயங்களில் இலங்கையர்களை மூன்றாம் தர மக்கள் போன்றவர்கள் போன்று அல் ஜெசீரா கருதுகிறதா? அவர் ஆக்ஸ்போர்டில் இருந்து அல்லது வேறு எங்காவது தகுதி பெற்றவராக இருந்தாலும் சரி, காஸா, மியான்மர், காஷ்மீர் போன்ற பிரச்சினைகள் உள்ள பிற பிராந்தியங்கள் குறித்து டிரம்ப், புடின், மோடி, நெதன்யாகு போன்றவர்களிடம் இது போன்று கேள்வி கேட்க முடியுமா?
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் இலங்கை குறித்து பத்திரிகையாளர் என்று அழைக்கப்படுபவர் போலவே இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
இனப்படுகொலையை நாங்கள் ஆதரிக்கவில்லை, மேலும் 1990 களில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது எந்த வகையான இன அழிப்பும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |