மற்ற வைத்திய சாலைகளில் காணப்படும் unit கூட கிண்ணியா வைத்தியசாலையில் இல்லை!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் காணப்படும் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் முறையான வசதிகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் இன்றைய தினம்(08) இடம்பெறும் விவாதத்தின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மற்ற வைத்தியசாலைகளில் காணப்படும் யுனிட்ஸ் கூட கிண்ணியா மூதூர் வைத்தியசாலைகளில் இல்லை.
இந்த செய்தியினை இங்கு முன்வைக்க காரணம் தேசிய மட்டத்திற்கு இவ்வாறான பிரச்சினைகள் கொண்டுவரும் போது தான் இதற்கான தீர்வுகள் மற்றும் பராமரிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் பதிவு செய்த கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |