தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் போட்டி

South Eastern University of Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Mar 07, 2025 09:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் கடந்த 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் புதிய உபவேந்தர் ஒருவர் நியமிக்கப்படாது பதில் உபவேந்தராக யூ.எல்.அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போதைய புதிய ஆட்சியின் கீழ் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த பெப்ரவரி 06 ஆம் திகதி விடுத்திருந்தார்.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : இன்றைய நாளுக்கான நிலவரம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : இன்றைய நாளுக்கான நிலவரம்

உபவேந்தர் பதவிக்கான விண்ணப்பம் 

இதற்கமைய மார்ச் 06ஆம் திகதி, 3.00 மணி வரை 9 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில், யூ.எல்.அப்துல் மஜீத், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எம்.ஐ.எஸ். சபீனா, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக், பேராசிரியர் ஏ.ஜௌபர் மற்றும் யூ.எல்.செயினுடீன் உள்ளிட்ட ஒன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் போட்டி | 9 Candidates Competing For Southeastern Vc Post

புதிய உபவேந்தர், பல்கலைக்கழக பேரவையின் விசேட ஒன்றுகூடல் ஒன்றின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, அதிகூடிய புள்ளிகள்  எனும் அடிப்படையில் மூவரை தெரிவு செய்வர். குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சபையில் பொய் கூறும் சாணக்கியன்! எழுந்துள்ள விமர்சனம்

சபையில் பொய் கூறும் சாணக்கியன்! எழுந்துள்ள விமர்சனம்

புற்று நோயாளர் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்

புற்று நோயாளர் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW