சாய்ந்தமருதில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கைகள் நேற்று(06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது அண்மையில் வைத்தியசாலை வீதியில் டெங்கு நோயாளியாக இனங்காணப்பட்டவரின் வீட்டுக்கு களப் பரிசோதனை மேற்கொண்டு அவ்வீட்டின் சுற்றுச்சூழலை அவதானிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நோய்த்தொற்றாக கூடியவாறு சூழலை வைத்துக்கொண்ட காரணத்தால், குறித்த வீட்டுரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
களப்பணி..
இதனையடுத்து, அவ் வீதியிலுள்ள 20 வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த களப்பணிகளில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இதன்போது டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




