பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Sri Lankan Peoples
Department of Meteorology
Climate Change
By Rukshy
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்.
தற்காலிகமாக பலத்த காற்று
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீட்டர் அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |