ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்
Srilanka Muslim Congress
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Rakshana MA
காரைதீவு பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக விசேட கூட்டம் ஒன்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட கூட்டமானது, மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் நேற்று(12) மாளிகைக்காட்டில் நடைபெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், காரைதீவு பிரதேச சபையின் மரச்சின்ன வேட்பாளர்களான எம்.எச்.எம்.நாசர், எப்.எம்.ரௌபி, பட்டியல் வேட்பாளர்கள் மற்றும் மாளிகைக்காடு பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



