க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்
Ministry of Education
Sri Lankan Peoples
G.C.E.(A/L) Examination
By Rakshana MA
2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
பெறுபேறு வெளியீட்டிலுள்ள சிக்கல்
எவ்வாறாயினும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக 20ஆம் திகதிக்கு பின்னரே பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சுமார் 331,185 பரீட்சார்த்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |