ஈழதமிழர்கள் குறித்து தமிழக முதல்வருடன் நேரடி சந்திப்பில் தமிழ் எம்.பி!
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் முதலமைச சந்திரசேகர் ஜோசப் விஜயை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று (03-07-2026) தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஈழதமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடி எழுத்து மூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றை முதல்வரிடம் கையளித்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரச்சனை
குறித்த சந்திப்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர், தருமலிங்கம் சுரேஷ், அந்த கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகிய ஏழு பேர் கொண்ட குழுவினரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.