கேக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பரிசோதிப்பதற்கு இலங்கையில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையை பின்பற்றாததால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் முட்டை அல்லது மார்ஜரின் போன்றவற்றை கேக் உற்பத்திக்கு பயன்படுத்துவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு எச்சரிக்கை
இதன்படி, தயாரிப்புகளில் பெரும்பாலும் வெண்ணெய் சுவை மற்றும் செயற்கை முட்டை சுவை உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் கேக்குகள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்பதையும் நுகர்வோர் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் சந்துன் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |