ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு
9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர் பட்டியலின்படி ஒரு கோடியே எழுபத்தி ஒரு இலட்சத்து 40,354 பேர் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தல்
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை ஏதும் வெடிக்குமானால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |