நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறை

Tiran Alles Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 10:24 AM GMT
Laksi

Laksi

புதிய இணைப்பு

நாடளாவிய ரீதியில் இன்று (21) இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வன்முறை ஏதும் வெடிக்குமானால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தல்: பதிவான மொத்த வாக்கு வீதம்

2024 ஜனாதிபதி தேர்தல்: பதிவான மொத்த வாக்கு வீதம்

நாட்டின் பாதுகாப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறை | Curfew In Sl President Election

ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

சூடுபிடிக்கும் இலங்கை தேர்தல் களம்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

சூடுபிடிக்கும் இலங்கை தேர்தல் களம்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW