புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்
நாட்டின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தேஜானி திலகரத்ன தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்கு
அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தற்போது மாவட்ட ரீதியாக தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |