ஏமனின் எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்
United States of America
Yemen
Palestine
Israel-Hamas War
By Rakshana MA
அமெரிக்காவினால் (America) ஏமன் நாட்டின் ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலில் இதுவரை 171 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வான்வழித்தாக்குதல்
பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயற்படும் ஹவுதி அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி அமைப்பு தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், ஏமனில் ஹவுதி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |