காரைதீவு பகுதியில் திடீர் சோதனை : சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள்

Sri Lankan Peoples Healthy Food Recipes Eastern Province Kalmunai Public Health Inspector
By Rakshana MA Apr 19, 2025 07:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை - காரைதீவு(karaitivu) பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, காரைதீவு பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு தேவையான மாதவருமானத்தின் உண்மை நிலை!

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு தேவையான மாதவருமானத்தின் உண்மை நிலை!

சட்டநடவடிக்கை 

மேலும், இதன்போது பல்வேறு உணவு பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மீன்வாடிகள், பழ விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் போன்றன பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளன.

காரைதீவு பகுதியில் திடீர் சோதனை : சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் | Unsafe Foods Seized In Karaitivu

இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

வாக்குச் சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்

வாக்குச் சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்

நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள்

அத்துடன் பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

காரைதீவு பகுதியில் திடீர் சோதனை : சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் | Unsafe Foods Seized In Karaitivu

பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பணிப்பாளர் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் மின்னல் தாக்கி நபரொருவர் மரணம்

அம்பாறையில் மின்னல் தாக்கி நபரொருவர் மரணம்

இஸ்லாத்தில் பெண்களுக்கான உரிமையில்..

இஸ்லாத்தில் பெண்களுக்கான உரிமையில்..

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery