அம்பாறையில் மின்னல் தாக்கி நபரொருவர் மரணம்

Ampara Sri Lankan Peoples Eastern Province Accident Sammanthurai
By Rakshana MA Apr 19, 2025 05:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை - சம்மாந்துறையில் (Sammanthurai) மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் சடலம்  பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று(19) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்றையதினம் (18) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு தேவையான மாதவருமானத்தின் உண்மை நிலை!

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு தேவையான மாதவருமானத்தின் உண்மை நிலை!

மின்னல் தாக்கம் 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை 72/2 பி செந்நெல் கிராமம் -02 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், குறித்த நபர் மற்றுமொரு நபருடன் வேலையின் நிமித்தம் வயலுக்கு சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்துள்ளது.

அம்பாறையில் மின்னல் தாக்கி நபரொருவர் மரணம் | Heavy Rain With Lightning At Ampara District

இதன்போது உயிரிழந்தவரின் அருகில் வயல் வேலையில் ஈடுபட்டவர் காயமடைந்த நிலையில் சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட பின்னர் குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் மின்னல் தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கையில் இன்று முதல் விசேட திட்டம் : பயணிகளுக்கான அறிவித்தல்

இலங்கையில் இன்று முதல் விசேட திட்டம் : பயணிகளுக்கான அறிவித்தல்

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW