அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்தில் இன்னும் 400,000 புதிய பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எரிபொருள் விலையைக் குறைத்தோம், மின்சார விலையைக் குறைத்தோம், அஸ்வெசும கொடுப்பனவை உயர்த்தினோம்.
அதுமாத்திரமின்றி ஜூலை மாதத்தில் இருந்து அஸ்வெசும திட்டத்தில் 400,000 புதிய பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
பாடசாலைப் பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு கொடுப்பனவு வழங்கியுள்ளோம்.
மன்னார் - இராமேஸ்வரத்திற்கு இடையில் மீண்டும் படகு சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் புத்தளம் மன்னார் பாதையை இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |