இலங்கையில் இன்று முதல் விசேட திட்டம் : பயணிகளுக்கான அறிவித்தல்
போக்குவரத்திற்கான விசேட திட்டத்தினை இன்று(17) முதல் முன்னெடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளன.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அதற்காக மேலதிகமாக 800 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட தொடருந்து சேவை
இதனிடையே, பொது மக்களின் நலன் கருதி நாளை முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பயணிகள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படும் சாதாரண தொடருந்து சேவை, குறித்த தினங்களிலும் முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |